நாளை முட்டாள் தினத்தை பயன்படுத்தி கொரோனா குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம்.
நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தற்போது நிறைய பேர் கண்டெண்ட் ரெடி செய்து இருப்பார்கள். எதற்காக என்றால் தற்போது நாடே அச்சத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனா மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி சிலர் வீண் வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்களிடையே பரப்பி மேலும் பீதியை உண்டாக்கி வருகின்றனர். நாளை ஏப்ரல்-1 இதற்காகவே தனியாக கண்டன்ட் தயார் செய்திருப்பார்கள். ஆனால் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் நாளை யாரும் கொரோனா குறித்து வதந்தி பரப்ப வேண்டாம். காரணம் கொரோனா அச்சம் காரணமாக பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
நோயால் இருப்பவர்களை விட அதனுடைய தற்கொலையால் இறப்பவர்கள் தான் அதிகத்து வருகிறார்கள் என்று சுகாதாரத் துறை வேதனையுடன் தெரிவித்தது. ஏப்ரல் ஓன்று முட்டாள் தனத்தை பயன்படுத்தி நீங்கள் ஒரு சிறு பொய் கூறினாலும் அதை மிகப்பெரிய பிரச்சனைகளில் கொண்டுபோய் முடித்துவிடும். ஆக கிண்டல் கேலி செய்வதற்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதை பயன்படுத்தி நம் உற்றார் உறவினர்களை சிரிக்க வைக்கலாம். நண்பர்களை சிரிக்க வைக்கலாம். தவறில்லை. ஆனால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம்.