நமது கால்களை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
நாம் சுத்தபத்தமாக இருக்கிறோமா என்பதை முடிவு செய்வது நம்முடைய தோற்றம் தான். அதிலும் அனைத்து இடங்களையும் நாம் பளபளப்பாக வைத்திருந்தால் மற்றவர்கள் பார்வைக்கு நாம் சிறப்பாக தெரிவோம். உதாரணமாக தலை முதல் கால் வரை அத்தனையையும் பளபளப்பாக வைத்திருப்பது நம்முடைய கடமை. உதாரணமாக எங்கேயாவது உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றால் நமது செருப்பை கழட்டி விட்டு தான் உள்ளே செல்வோம்.
அப்போது நமது கால்களில் இருக்கும் ஒரு விதமான சொங்கு, சொரசொரப்பு நமக்கே கூச்சத்தை உண்டாக்கும். ஆக கால்களை பளபளப்பாக வைப்பது குறித்து பார்க்கலாம், அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் உப்பு, தேங்காய் எண்ணெய், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை கலந்து 15 நிமிடம் ஊற விடுங்கள். பாதங்கள் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான நீர் இருக்க வேண்டும். பின் நார் கொண்டு கால்களை நன்கு தேய்த்துக் கழுவிவிடவும். அதன் பின் சிறிது மாஸ்டரைசர் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கால்கள் பளபளப்பாக மாறிவிடும்.