ஜெர்மனியில் சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் வந்த காரின் மீது காண்டாமிருகம் ஓன்று கோபத்துடன் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது
ஜெர்மனிய மாநிலமான லோயர் சாக்சனியில் (Lower Saxony ) உள்ள நகராட்சியான ஹோடன்ஹேகனில் உள்ள செரெங்கேட்டி (Serengeti ) சஃபாரி பூங்காவில் விலங்கு பராமரிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த காரின் மீது கோபத்துடன் 30 வயதான குசினி (kusini) என்ற காண்டாமிருக காளை, தனது கொம்புகளை வைத்து மூன்று முறை புரட்டி போட்டது. மிருகத்தனமான தாக்குதலில் வாகனம் கடுமையாக சேதமடைந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் தாக்குதல் நடந்தது மற்றும் ஒரு பார்வையாளரால் படமாக்கப்பட்டது
இதுகுறித்து செரெங்கேட்டி பூங்காவின் மேலாளர் ஃபேப்ரிஜியோ செப் (Fabrizio Sepe,) கூறியதாவது, குசினி ஏன் இவ்வளவு கோபமடைந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார். மேலும் காண்டாமிருகம் கடந்த 18 மாதங்களாக பூங்காவில் வசித்து வருகிறது. இன்னும் தனது புதிய சூழலுடன் பழகிக் கொண்டிருந்தது என்றும் கூறினார்.
பார்வையாளர்களுக்கு எந்த ஆபத்தையும் அளிக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் பார்வையாளர்கள் வெளியேறியபின் காலை மற்றும் மாலை நேரங்களில் குசினி பூங்கா வளாகத்தில்மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும் விளக்கினார்.