கால்பந்து விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
நாம் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதே பல உடல் பாதிப்புகள் வராமல் நம்மை பாதுகாக்கும். அந்த வகையில், கால்பந்தாட்டம் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறது. முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இடையே இதய ரத்த நாள நோய்கள், சர்க்கரை நோய் போன்ற உடல்நல பாதிப்புகளை தடுப்பதாக டென்மார்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் உடல் தசைகள் வலுவடைந்து நோய் தடுப்பு மண்டலமும் வலுப்படுவதாக ஆய்வு கூறுகிறது.