Categories
தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

“கால்பந்து ஆடி இணையத்தை கலக்கும் மாடு” வைரலாகும் வீடியோ …!!

கேரளாவில் மாடு கால்பந்து விளையாடுவது போன்ற வீடியோ வைரலாகி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

எப்போது எது வைரலாகும் என்று தெரியாது. சாதாரணமாக நடைபெறும் சில விஷயங்கள் மற்றும் கேளிக்கைகள் இன்றைய கால இணைய பங்களிப்பை வைத்து சமூக வலைதளத்தில் வைரலாகி விடுகின்றது. ஆனால் தற்போது வைரலாகியுள்ள விஷயம் சாதாரணமானது அல்ல. அதாவது கேரளாவில் உள்ள மைதானத்தில் இளைஞரகள் வழக்கம் போல கால் பந்தாட்டம் விளையாடினார்.

அப்போது அங்கே வந்த ஒரு மாடு இளைஞர்களுடன் கால்பந்தாட்டம் விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இளைஞர்கள் பந்தை அடித்த போது அந்த பந்து மாட்டின் அருகே சென்று விடுகின்றது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாடு அந்த பந்தை ஒரு வீரனை போல சக  இளைஞர்களை எடுக்க விடாமலும் , பந்தை மாற்று இடத்துக்கு அடித்த போது அதை விரட்டி செல்வது போன்ற நிகழ்வு அங்கே காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Categories

Tech |