முன்னாள் கால்பந்து வீரர் மருத்துவரின் குடும்பத்தையும் உதவியாளரையும் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா தென் கரோலினா பகுதியில் மருத்துவரின் குடும்பம் மற்றும் மருத்துவரின் உதவியாளரை கொலை செய்தது முன்னாள் கால்பந்து நட்சத்திரம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து யார்க் கவுண்டி அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கால்பந்து வீரர் ஆதம் மருத்துவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் மருத்துவர் ராபர்ட் லெஸ்லி(70) அவரது மனைவி பார்பரா லெஸ்லி(69) அவரது பேரப்பிள்ளைகள் அடாலெஸ்லி(9) மற்றும் நோவாலெஸ்லி(5) ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவர் உதவியாளரையும் சேர்த்து கொன்றுள்ளார் என்றும் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கால்பந்து வீரர் ஆதம் அவர்களை கொலை செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.