Categories
மாநில செய்திகள்

11ம் வகுப்பு சேர்க்கைக்கு…. நுழைவுத்தேர்வு கிடையாது…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

11 ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காரணங்கள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்தது. மேலும் பொதுத்தேர்வு கட்டாயமாக நடக்கும் என்றும் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் 10 பத்தாம் வகுப்பு பொது தேர்வு மிக முக்கியமானது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்ணில் அடிப்படையில் தான் 11 ஆம் வகுப்பில் குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர முடியும். எனவே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது.

இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது பெரும் சுமையாக இருக்கும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு என்பது கிடையாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |