டாஸ்மாக்கில் காலி பாட்டல்களை வாங்கும் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டல்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்று, பின்னர் அந்த காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த பத்து ரூபாய் தொகையை திரும்ப ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கக்கூடிய மலைவாழ் ஸ்தலங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் என்ன ? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றமானது ஒரு யோசனை தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அஜரமான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்,
முதலில் ஒரு மாவட்டத்தில் இத்திட்டத்தை சோதனை முறையில் அமல்படுத்தி, அதன் முடிவுகளை பார்த்த பின்னர் பிற மாவட்டங்களில் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து கோவை மட்டும் பெரம்பலூர் மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் காலி பாட்டல்களை திரும்ப பெரும் திட்டத்தை நவம்பர் 15 ஆம் தேதி முதல் இரு மாதங்களுக்கு அமல்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கினுடைய விசாரணையை ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்.