தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சத்யபிரதா சாகு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த அதிகாரிகள் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் தொடர்பாக யாரும் புகார்களை கவனித்து தீர்ப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்த பணிகளையும் மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.