Categories
சென்னை மாநில செய்திகள்

இன்னும் 3 மாதங்களுக்கு…. சென்னையில் அட்ராசக்க… ரொம்ப நல்லதுங்க …!!

கொரோனா பெருந்தொற்றால் கடந்த 7 மாதமாக ஒட்டுமொத்த நாடும் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து மாநிலங்களும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக அதிக தொற்று கொண்ட மாநிலங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதிலிருந்து மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் வழங்கப்படும் நல்ல சிகிச்சையும், தரமான சுகாதார கட்டமைப்புமே கொரோனாவில் இருந்து தமிழகம் மீள்வதற்கு காரணம். இருந்தாலும் கூட தற்போது வரை தலைநகர் சென்னையில் பல உத்தரவுகளும், கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ”சென்னையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் இன்னும் மூன்று மாதத்தில் கடுமையாக கடைபிடிக்கப் படும்” என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |