Categories
அரசியல் மாநில செய்திகள்

5வருஷமா DMK சொல்லுது… ADMK சப்பன்னு நினைசீங்களா… எங்களை அசைக்க முடியாது… காலரை தூக்கிவிட்ட EPS ..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுகவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாக ஐந்து வருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு இல்ல, ஐந்து வருடம் சொல்லிட்டு இருக்காங்க. ஒரு அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை கூட அசைக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். பத்து நாளுக்கு இந்த ஆட்சி நிக்குமா ?

எடப்பாடி தலைமையில் இருக்கின்ற ஆட்சி ஒரு மாசமா?  மூணு மாசமா ? ஆறு மாசமா ? என்றால், நாலு ஆண்டு 2 மாத காலம் சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு தந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திமுக கட்சி. அண்ணா திமுக கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இன்னைக்கு ஆர் எஸ் பாரதி யாரு ? அவர எலக்சன் நின்னு ஜெயிக்க சொல்லுங்க பாக்கலாம். அடுத்த தேர்தலில் நிற்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவர் கூட அண்மையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார். எந்த கட்சியா இருந்தாலும் பரவால்ல, ஒரு கட்சித் தலைவரை பார்த்து அடிக்கவேண்டும், உதைக்க வேண்டும்  என சொல்கிறார். ரவுடிகளும், குண்டர்களை வைத்து கட்சி நடத்துகின்ற கட்சி திமுக கட்சி. அண்ணா திமுகவை பொருத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்,

மக்களுக்கு உழைக்கின்ற தொண்டர்கள் நிறைந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கட்சி.ரவுடிகளையும், தொண்டர்களும் நிறைந்த கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னற்ற கழக கட்சி. அண்ணா திமுகவை பொறுத்த வரைக்கும் ஒரு தொண்டனை கூட திராவிட முன்னேற்றக் கழகத்தால் அசைக்க முடியாது என தெரிவித்தார்.

Categories

Tech |