9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களின் கருத்து கேட்பிறகு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வித்துறை இயக்குனர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.