Categories
மாநில செய்திகள்

“9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு”… வெளியான அறிவிப்பு..!!

ஒன்பதாம் வகுப்பு பாட திட்டத்திலும் பாடங்கள் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. தற்போது கடந்த 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வகுப்புகளுக்கு 25 மாணவர்கள், கட்டாயம் முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகிறது.

தற்போது ஒன்பதாம் வகுப்பிற்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பிற்கு 50% வரை பாடத்திட்டங்களும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 40% வரை பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |