Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாதாரண குடும்ப சண்டைக்காக…. மகனின் உயிரை…. துப்பாக்கி முனையால் எடுத்த தந்தை – வேலூரில் பரபரப்பு…!!

வேலூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியன்(55). இவர் தற்போது இரவுநேர காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று குடித்துவிட்டு தந்து தன்னுடைய மகளை திட்டியுள்ளார். எனவே இளைய மகன் வினோத் தங்கையை திட்டக்கூடாது என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த இரட்டை குழல் துப்பாக்கி எடுத்து தன்னுடைய மகனை சுட்டுள்ளார்.

இதனால் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சுப்பிரமணி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வினோத் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வினோத்தின் அப்பாவான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.அந்த பகுதியில் சுற்றித்திரிந்த சுப்பிரமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இதையடுத்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |