மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். இன்று உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
புகழ் கௌரவம் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்லக்கூடும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்