முந்தைய காலத்தில் பயன்படுத்திய வித்தியாசமான அழகு சாதன பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பு.
இந்தியாவில் தமிழ் பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது முன்னோர்கள் வழங்கிய அழகுக்குறிப்புகள் என்பதை மறக்க முடியாது. காலத்திற்கு ஏற்றார்போல் அழகு குறிப்புகள் மாற்றமடைந்து வருகிறது. சமையலறையில் பயன்படுத்தும் பல பொருட்கள் முந்தைய காலத்தில் அழகு சாதன பொருட்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று பசுவின் சாணம் மற்றும் சிறுநீரையும் அழகுக்கு பயன்படுத்தியுள்ளனர். கேட்க அருவருக்கத்தக்க தாக இருக்கும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் தான் முந்தைய காலங்களில் அழகுக்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய பொருளாக அமைகிறது. இந்தியாவில் பழங்காலத்திலிருந்து மதிக்கப்படும் விலங்கு பசு. இது பல பயன்களை அளிக்கக்கூடிய ஒன்று.
பசுவிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்கள் பல தயாரிப்புகளுக்கு உதவி புரிகிறது. பசு சாணம் மற்றும் சிறுநீரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தோல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பைக் கொடுக்கும். முகத்தில் ஏற்படும் பருக்கள் குதிகாலில் ஏற்படும் பிரச்சினை போன்ற அனைத்திற்கும் இதுவே சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது