தேவையான பொருட்கள்
தூதுவளை பொடி
பனங்கற்கண்டு
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் எடுத்து வைத்துள்ள தூதுவளை பொடியை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் பனங்கற்கண்டை இனிப்பிற்க்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளவும்.
இரண்டையும் நன்றாக கட்டி இல்லாதவாறு கலக்கி விடவும்.
ஒரு டம்ளர் தண்ணீர் வற்றும் வரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
பயன்படுத்தும் முறை
சூடாக இருக்கும் பொழுது அருந்தகூடாது. காலையில் வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். தொடர்ந்து இதனை குடித்து வந்தால் மூச்சுத்திணறல் பிரச்சனை குறைந்துவிடும்.