Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டுவது ஏன்..? அறிவியலா இல்லை மூடநம்பிக்கையா..?

தாய்மார்களே குழந்தைகளுக்குப் நிலாவை காட்டி சோறு ஊட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்று அறிவியல் கூறுகின்றது என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது என்பது முன்னோர் காலத்திலிருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம். இது விளையாட்டான செயலோ அல்லது மூட நம்பிக்கையோ கிடையாது. அது ஓர் அறிவியல். அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கு அது ஒரு பொற்காலம். ஒரு குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கின்றது. பிறந்தவுடன் தொப்புள் கொடி உடலிலிருந்து பிரிந்தபின் உணவுகளில் விரிய தொடங்குகிறது.

இது முழுமை அடைய சுமார் 5 வருடங்கள் ஆகின்றது. தாய் என்பவள் குழந்தைக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை வானத்தை பார்த்து அதாவது அண்ணாந்து பார்த்து உணவை உண்ணும். அப்போது குழந்தையின் தொண்டை மற்றும் உணவுக் குழல் விரிவடைகின்றது. இதனால் உணவு மிக இலகுவாக இரைப்பையை நோக்கி இறங்குவதால் அதன் இயக்கங்கள் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றது. இதன் மூலம் குழந்தைகளின் உணவு செரிமானம் ஆகி ஆரோக்கியத்தை தருகின்றது.

செல்போனை காண்பித்தும், டிவியை காட்டியும் குழந்தைகளுக்கு உணவூட்டும் இன்றையை தலைமுறை தாய்மார்களே! இனியாவது நாம் நிலாச்சோறை ஊட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமின்றி குடும்பத்தினருடன் அமர்ந்து உண்டு அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்.

Categories

Tech |