Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“குழந்தைகளுக்கு புடிக்கும் தா”… ஆனா அதுல எவ்வளவு ஆபத்து இருக்கு தெரியுமா..? இனிமே கொடுக்காதீங்க..!!

தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதை பெற்றோர்கள் கொடுக்கக்கூடாது.

குழந்தைகள் திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் உணவுகளை பார்த்துவிட்டு அதை வாங்கி கொடுக்கும்படி பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள். இந்த உணவு கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் அதாவது இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்கள் போன்றவற்றை அம்மாக்கள் செய்து தருகிறார்கள். ஆனால் இதில் எந்த சத்தும் கிடையாது. இது செரிமானமாக இரண்டு மணி நேரம் ஆகும். இதனால் வயிற்று வலி வயிற்றுப் போக்கு கூட ஏற்படும்.

குழந்தைகளுக்கு இதுபோன்ற நூடுல்சை வாங்கி தரக்கூடாது. இதில் ஒரு வேதிப்பொருள் உள்ளது. குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் . நரம்பு செல்களை சேதப்படுத்தும், மூளை செயலிழப்பு கூட ஏற்படும். அதிகமாக நூடுல்ஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் குறைகிறது. குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கொடுப்பதை தவிர்த்து விட்டு சத்தான உணவுகளை கொடுங்கள். குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக அதனை நிறைவேற்றும் பொருட்டு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை வாங்கித் தராதீர்கள்.

Categories

Tech |