அரைக்கீரை மிளகு கசாயம்
தேவையான பொருட்கள்
அரைக் கீரை தண்டு – ஒரு கைப்பிடி
மஞ்சள் – சிறிதளவு
மிளகு – 15
செய்முறை
- முதலில் மிளகை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- அரைக் கீரையில் கீரைகளை எடுத்துவிட்டு தண்டை மட்டும் எடுத்து வைக்கவும்.
- தண்டை சிறிய துண்டுகளாக வெட்டி பாத்திரம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
- பின்னர் அதனுடன் பொடித்து வைத்துள்ள மிளகுத் தூளையும் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
- நன்றாக கொதித்து தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து வடிகட்டிவிடவும்.
நன்மைகள்
நுரையீரல் சார்ந்த குறைபாடு, சளி மற்றும் இருமல் தொல்லைகள் குணமாக இதனை குடித்து வருவது நல்லது.