பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்தாலும், பொதுத்தேர்வு என்பது நிச்சயமாக நடக்கும் என்றும், இந்த கல்வி ஆண்டை பூஜ்ஜிய கல்வி ஆண்டாக மாற்ற வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்விதொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர் ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் விவகாரத்தில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து அந்தந்த துறை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரை உடனே பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்வு பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பொதுத்தேர்வு நடப்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.