பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் உமாமகேஸ்வரன். இவர் யூடியூப், பேஸ்புக் மற்றும் சில சமூக வலைதளங்களில் நேரலை செய்யக்கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனலில் தவிர மற்ற சேனல்கள் உண்மைக்கு புறம்பான விஷயங்களை நேரலை கொடுத்து வருகின்றனர் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “மத்திய அரசு தரப்பில் யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் மற்ற சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், புகார்கள் எதுவும் வரும் பட்சத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் பேஸ்புக், கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.