Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு இனிப்பான செய்தி…. முதல்வர் அறிவிப்பு…!!

ரேஷன் கடைகளில் கருப்பட்டியையும் சேர்த்து வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

சென்னையில் நாடார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில், முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பனை பொருட்கள் தயாரிப்பில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதைத் தான் தினமும் என் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை சேர்த்து தான் குடித்து வருகின்றேன்.

அப்போது பனங்கருப்பட்டியை நியாயவிலை கடைகள் மூலம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இது குறித்து தமிழக அரசு கட்டாயம் பரிசீலனை செய்யும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொறுத்தவரை 2,11,93,724 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இதன்மூலம் 6,82,12,884 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. குடும்ப அட்டைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக PHH, PHH-AYY, NPHH, NPHH-S என்று நான்கு வகையான ரேஷன் அட்டைகள் அமலில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விதமான சலுகைகள் தற்போது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |