Categories
தேசிய செய்திகள்

“விவசாயிகளுக்கு ஒன்னும் தெரியாது… யாரோ சொல்லிக் கொடுத்து இதை செய்றாங்க”… பிரபல நடிகை சர்ச்சை கருத்து..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களை குறித்து ஒன்றும் தெரியாது என்று பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு விவசாயிகளுடன் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அது தோல்வியிலேயே முடிந்தது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு இன்னும் ஏற்கவில்லை. ஆனால் குறைந்த பட்ச ஆதார விலை மற்றும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் ஆகிய விவசாயிகளின் இரண்டு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கருத்து. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மூன்று சட்டங்களையும் இடைக்காலம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகையும் உத்தரபிரதேச மாநிலத்தின் மதுர தொகுதியில் எம்பியுமான ஹேமமாலினி சட்டங்களை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது நிலமையை அமைதிப்படுத்தும் என்று கூறினார். அவர் இந்த சட்டங்களை குறித்து விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறியது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளது. யாரோ சொல்வதை கேட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகளுடன் பேசுவதற்கு ஒரு விஷயமும் இல்லை என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |