பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவை கட்டுவதற்காக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர பல்கலைக் கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அறியார் தேர்வுகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவித்தார். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் டிசம்பர் 7ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான நடப்பாண்டு செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 14ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பிறகு மற்ற ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும் எனவும், தேர்வு தொடர்பான அட்டவணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.