உலகத்தர கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் ஐஐடிக்களும் அடக்கம். இதில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்பதற்காக இணையவழி நுழைவுத் தேர்வு பயிற்சியை அரசு வழங்க உள்ளது.
நீட் தேர்வை நடத்துகின்ற தேசிய தேர்வு முகமை தான் ஐஐடி சேர்க்கைக்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வையும் நடத்துகிறது. இதற்கு தயாராக விரும்புவோர் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு புது டில்லியை சேர்ந்த “நெக்ஸ்ட் ஜென் வித்யா” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இது இணைய வழியிலான பயிற்சி.
இவர்கள் மாணவர்களுக்கு யூசர் ஐடி பாஸ்வேர்டு கொடுப்பார்கள். சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். மாணவர்களை கண்காணிக்க அந்தந்த பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியே யூசர் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பயிற்சி வழங்கப்படும். இச்செய்தி உங்களுக்கு உபயோகம் இல்லை என்றாலும் உங்களை சுற்றி இருக்கின்ற எத்தனையோ அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் அவர்களுக்கு சென்றடைய இதனை பகிருங்கள்.