Categories
Uncategorized

பட்டதாரி ஆசிரியர்களுக்கு…. ஓரிரு நாட்களில் பணி நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்…!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு  நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கம்ப்யூட்டர்  பழுது காரணமாக செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் செல்போனில் தேர்வெழுதியவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்றும் கூறியது.

இந்நிலையில் ஏற்கனவே  கடந்த வாரம் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த நிலையில் மீண்டும் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தனர். அப்போது ஓரிரு நாளில் முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து களைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |