கை, கால் மற்றும் அல்சர் போன்றவற்றை நீக்க என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருள்:
சீரகம் 10 கிராம்.
தண்ணீர் அரை லிட்டர்.
கைக்குத்தல் அவல் 125 கிராம்.
செய்முறை:
சீரகத்தை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அவலை அதில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் சிறிது நாட்டுச் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிடவும்.
இத்துடன் இளநீரையும் சேர்த்து வாரம் இரண்டு நாள் மதியம் சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். கை,கால் வலி நீங்கி உடல் வலிமை பெறும்.