Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்குவோருக்கு…. மிக மிக மகிழ்ச்சியான செய்தி…!!

ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக சொத்துக்களான வட்டாரத்தை 20% டெல்லி அரசு குறைத்துள்ளது.

டெல்லியில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி தற்போது மந்தம் அடைந்துள்ளதால் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் கொடுப்பதற்காக சொத்துக்களான வட்டாரத்தை 20% டெல்லி அரசு குறைத்துள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் வரை இந்த விகிதம் குறைப்பு அமலில் இருக்கும். இதன்மூலம் டெல்லியில் வீடு வாங்க விரும்புவோருக்கு நிவாரணமும் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமும் கிடைக்கும் என்று டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட காலத்துக்கு இந்த வட்டாரங்களை குறைத்தாலும் ரியல் எஸ்டேட் சந்தையில் நல்ல செய்திதான். ஏனென்றால் இதனால் வீடுகளின் விலை குறைந்துவிடும்.

ஒரே மாநிலத்துக்குள் இருக்கும் பல்வேறு நகரங்களில் மார்க்கெட் மதிப்பு அந்த பகுதியில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப வட்டார விகிதம் வேறுபடும். வட்டார விகித மாற்றங்களை வைத்து சில பகுதியில் சொத்து மதிப்பை கணித்துவிடலாம். இது ரியல் எஸ்டேட் துறையினருக்கும் வீடு வாங்குவபவர்களுக்கும் மகிழ்ச்சி செய்தியாக உள்ளது. ரியல் எஸ்டேட் துறையினர் வீடு வாங்குவோர் என்று இரண்டு தரப்பினருமே கொரோன நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி அரசின் இந்த நடவடிக்கை காரணமாக வீடு விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |