இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டில் சேர்ந்த தம்பதிகள் அய்சல்(40) – செம்ரா(38). சம்பவத்தன்று அய்சல் தன்னுடைய கர்ப்பிணி மனைவியான செம்ராவை அழைத்துக்கொண்டு மலைமுகட்டில் சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர் அவரை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபல சுற்றுலாத் தலத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மனைவியின் பெயரில் இருக்கும் காப்பீட்டு தொகையை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள தன்னுடைய மனைவியை மலைமுகட்டில் இந்த தள்ளிவிட்டு கொன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காப்பீட்டு தொகையாக சுமார் 40,825 பவுண்டுகள் கிடைக்கும் என்பதால் திட்டமிட்டு தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மனைவி விபத்தில் இறந்ததாக கூறி காப்பீட்டு தொகையை தன்னுடைய பெயரில் மாற்றி வாங்க முயற்சித்துள்ளார் .ஆனால் இந்த விவரம் காவல்துறையினருக்கு தெரியவந்ததால் காப்பீட்டு நிறுவனம் எந்த தொகையும் வழங்க மறுத்துள்ளது. இவ்வாறு பணத்திற்காக தனது 7 மாத கர்ப்பிணியை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.