துலாம் ராசி அன்பர்களே..!! இன்று சமூகத்தில் நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரின் உதவி எளிதாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கக்கூடும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள். இன்று பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.
மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். பாடங்களை கவனமாக படிப்பது ரொம்ப நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவற்றை வாங்குவீர்கள். அதாவது குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். அன்பு பெருக்கெடுத்து ஓடும். புத்தி சாதுர்யமும், அறிவுத்திறனும், இன்று அதிகரிக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்