துலாம் ராசி அன்பர்களே…!! இன்று கூடுதல் வேலைப்பளு ஏற்படும். வீண் பேச்சு பேசுபவரிடம் விலகி இருங்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண வரவு சராசரி அளவில் இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு உதவிகள் கிடைக்கும். இன்று வரவுக்கு எந்தவித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாற்றம் இருக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். இன்றைய நாள் ரொம்ப சிறப்பாகவே காணப்படும்.
இன்று உங்களுக்கான முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்