ராமநாதபுரம் மாவட்டத்தில் எல்.கே.ஜி. மற்றும் 1ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிகளில் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி மற்றும் 1 ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 90 நர்சரி தொடக்கப்பள்ளிகளில் 841 இடங்களும், 62 மெட்ரிக் பள்ளிகளின் 1,043 இடங்களும் இரண்டு சுயநிதி பள்ளிகளில் 16 இடங்களும் என மொத்தம் 1,900 இடங்கள் அரசின் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இணையத்தின் வாயிலாக ஜூன் 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை சேர்க்கை நடைபெற உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் கல்வித்துறை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது மேலும் விண்ணப்பங்களை rte.tnschools.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.