தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை தமிழக அரசின் பிரத்யேக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து பரவி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியா முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் காலி படுக்கைகளை கண்டறிய பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லை என கூறி நோயாளிகள் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் கொரோனா சிகிச்சைக்கான காலிப் படுக்கைகளின் விவரங்களை அறிய https://tncovidbeds.tnega.org/ என்ற பிரித்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள காலிப் படுக்கைகளின் விவரங்களை அறியலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் எத்தனை மற்றும் ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் எத்தனை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.