ஒரு குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு பல தலைமுறைகளாக கைரேகை இல்லை என்பது வியப்படைய வைத்துள்ளது.
வங்கதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் அடேர்மேக்டொப்பிலியா என்ற அரிய வகை மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு கைரேகையே இல்லையாம். தற்போது அந்த குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக இருப்பவர் அபு. இவர் மருத்துவ உதவிப் பணியாளராக வேலை செய்து வருகிறார். அவரின் தந்தை விவசாயி. அவருக்கும் ரேகை இல்லை என்பது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் அபுவிற்கு வருடங்கள் செல்ல செல்ல கையில் ரேகை இல்லை என்பது கவலையாக மாறியுள்ளது.
நாம் பயன்படுத்தும் அலைபேசியில் இருந்து விமான நிலையத்தின் உள்ளே செல்வது வரை கைரேகை தரவு என்பது தேவைப்படுகிறது.அபு அப்படி இருக்கையில் 2018 ஆம் வருடம் சிறுவனாக இருக்கும்போது வங்கதேசத்தின் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கட்டை விரல் ரேகை வேண்டும் என்றபோது, அவருக்கு எவ்வாறு அட்டை வழங்குவது என்று ஊழியர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் அவருக்கு கைரேகை இல்லாத அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 2010ஆம் ஆண்டு கைரேகை எனது பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டது. விவசாய வேலைக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டுவது அவசியமாக உள்ளது இருப்பினும் அவரால் ஓட்டுனர் உரிமம் பெற இயலவில்லை. மேலும் முக்கியமான சிம் போன்ற ஆவணங்கள் எதுவும் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கைரேகை கட்டாயம் என்ற பட்சத்தில் அவருக்கும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஆண்களுக்கும் அந்த ஆவணங்களை வாங்க முடியவில்லை என்பதால் எல்லோரும் அவர்களின் தாய் பெயரிலேயே சிம் கார்டு போன்றவற்றை வாங்கி வருகின்றனர். இவ்வாறு பல தலைமுறைகளாக கைரேகையை இல்லாமல் வாழும் இந்த சம்பவம் வியப்படைய வைத்துள்ளது.