Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு மந்திரம் சொல்லி… தாலியில் கோர்க்க வைத்திருந்த தங்கத்தை… ஆட்டையை போட்ட புரோகிதர்…!!!

மந்திரங்களைக் கூறி திருமணம் செய்து வைக்க வேண்டிய புரோகிதரே திருமணத்தில் தாலியில் கோர்ப்பதற்காக வைத்திருந்த தங்கமணி குண்டுகளை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம், மேதக் மாவட்டம் என்ற பகுதியில் ஞானசந்தர் தாஸ் என்பவருக்கும், வசந்தா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வந்த புரோகிதர் திருமணத்திற்கு முன்பு மணமகன் மணமகளுக்கு செய்யவேண்டிய சம்பிரதாயங்களை அனைத்தையும் செய்து வைத்துவிட்டு, பெண்ணின் தாலியில் கோர்க்க வேண்டிய தங்கமணி குண்டுகள் அனைத்தையும் கேட்டு வாங்கியுள்ளார். அதற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து புரோகிதர் குண்டுமணி தங்கத்தை யாருக்கும் தெரியாமல் தனது பாக்கெட்டில் ஒளித்து வைத்துக் கொண்டு அவசர அவசரமாக திருமணத்தை முடித்து வைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

திருமண வீட்டாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அனைவரும் வீட்டுக்கு திரும்பிய நிலையில் தாலியில் கோர்க்க வைத்திருந்த தங்கமணி குண்டுகளை காணவில்லை என்று அனைத்து இடத்திலும் தேடி பார்த்தனர். அப்போது வீடியோவை பார்த்த போது தங்கமணி குண்டுகளை புரோகிதர் திருடியது தெரியவந்தது. அதன் மதிப்பு 1.60 லட்சம் ஆகும். இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது உறவினர்கள் அவர் மூன்று நாட்களாக வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தனர். பின்னர் திருமண வீட்டார் காவல் நிலையத்தில் புரோகிதர் மீது புகார் அளித்தனர்.

Categories

Tech |