Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வட்டியில்லா கடன்” ஆசையை தூண்டி கோடி கணக்கில் மோசடி….. 5 பேர் கைது….!!

சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கிவந்த ரூபி ராயல் ஜுவல்லரி மற்றும் பேங்க்ர்ஸ் என்ற நிறுவனம் வட்டியில்லா நகைக்கடன் வழங்கப்படும் இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என சலுகை அறிவித்திருந்தது. இதனை நம்பி ஏராளமான இஸ்லாமியர்கள் தங்களது நகைகளை ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக அடகு வைத்து பணம் பெற்று வந்தனர். வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை, வங்கிகள் மற்றும் முத்தூட் பின்கார்ப் போன்ற தனியார் நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடகு வைத்து பணம் வாங்கி பல கோடிக்கு சொத்து வாங்கி சொகுசாக அனுபவித்து வந்த ரூபி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தினர் 2019இல் நிறுவனத்தை மூடிவிட்டு கூண்டோடு தலைமறைவாகிவிட்டனர்.

சுமார் 35 கோடி மதிப்பிலான கிலோ தங்க நகைகளுடன் தங்க நகை கடைக்கு சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர் இதுகுறித்து வியாசர்பாடியைச் சேர்ந்த உமர் அலி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் தொடர்ந்து இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இதனையடுத்து மோசடிப் பேர்வழிகளை மட்டத்திலான அதிகாரிகள் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சையது ரகுமான், அனீஸ்ர் ரகுமான் மற்றும் ஊழியர்களான ரிகானா, சஜிதா, சகீனா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் அடகு வைத்து அதிக பணம் வாங்கி சுமார் 15 கோடி ரூபாய் சுட்டுக் கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி செய்த 500 கிலோ தங்கத்தில் 350 கிலோ தங்கம் நகைகள் முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நகைகளை அடகு வைத்து 50 கோடி ரூபாய்க்கு மேல் அந்த கும்பல் பணம் வாங்கியது அம்பலமானது. கைதான அவர்களிடம் விசாரணை நடத்தி நகைகள் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |