Categories
தேசிய செய்திகள்

இனி எல்லா வாகனங்களுக்கும்… இது கட்டாயம்… மத்திய அரசு அதிரடி..!!

எல்லா வாகனங்களுக்கும் கட்டாயம் ஃபாஸ்ட்டேக் வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி வாயிலாக நேற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி ஜனவரி 1 முதல் ஃபாஸ்ட்டேக் அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வாகனங்களில் பயணிப்போர் சுங்க சாவடிகளில் நிற்க தேவை இருக்காது. இதனால் நேரமும், எரிபொருளும் மிச்சமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு ஃபாஸ்ட்டேக் அறிமுகம் செய்தது. அப்போது நான்கு வங்கிகளில் மொத்தமாக ஒரு லட்சம் ஃபாஸ்ட்டேக் விநியோகித்தனர். 2017ஆம் ஆண்டில் எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்தது. 2018ல் 38 இலட்சமாக உயர்ந்தது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை இந்த ஃபாஸ்ட்டேக். மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989கீழ், 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் பதிவு செய்யப்படும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இந்த ஃபாஸ்ட்டேக் கட்டாயமாகும். அதேபோல fc வாங்கும் போது ஃபாஸ்ட்டேக் கட்டாயமாக இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது.

Categories

Tech |