Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் தேதி புதிய படங்கள்…! ”இப்போதைக்கு எதுமே வேண்டாம்”… அமைச்சர் அதிரடி கருத்து

10ஆம் தேதி புதிய படங்களை வெளியிட வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்து இருக்கின்றார்.

விபிஎஃப் கட்டணம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் முன்னதாக நிபந்தனை விதித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தி சில நிபந்தனைகளை வைத்திருந்தார்கள். குறிப்பாக திரைப் படங்களின் வசூலில் அனைத்து திரையரங்குகளுக்கும் சமமாக 50% பங்கீடு வழங்கினால் விபிஎஃப் கட்டணத்தை ஏற்கிறோம் என்று தயாரிப்பாளர்களிடம் திரையரங்க உரிமையாளர்கள் கூறியிருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போதைய செய்தியாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.தமிழகம் முழுவதும் திரையரங்குகளை 10-ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் புதிய படங்களுக்கு கட்டுப்பாடு வேண்டாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறியிருக்கிறார்.10ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும். திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

மேலும் புதிய படங்களை வெளியிட இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் கட்டுப்பாடு விதிக்க வேண்டாம். புதிய படங்களை வெளியிடுவதற்கு பிபிஎஃப் கட்டணம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. திரையரங்கை திறக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளதால் உடனே பேசி தீர்வு காண்பது இயலாத காரியம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |