உலக அளவில் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் flipkart நிறுவனமானது ஆக்ஸிஸ் வங்கியுடன் இணைந்து சூப்பர் எலீட் கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிரெடிட் கார்டை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, கிளியர்ட்ரிப் போன்ற ஷாப்பிங் தளங்களில் பொருட்களை ஷாப்பிங் செய்யும்போது பயன்படுத்தினால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி 20,000 ரிவார்டுகள் வரை கிடைக்கும். அதன் பிறகு முதலில் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யும் போது ஆக்டிவேட் சலுகையாக flipkart 500 சூப்பர் காயின்ஸ் கிடைக்கும். இந்த கார்டை பயன்படுத்தி ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும் போதும் 4 மடங்கு வரை சூப்பர் காயின்ஸ் கிடைக்கும். ஒரு பயனாளர் குறைந்தபட்சம் 100 ரூபாய் செலவு செய்தால் அவருக்கு 400 சூப்பர் காயின்ஸ் வரை கிடைக்கும். மேலும் flipkart-க்கு வெளியே மேற்கொள்ளும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 2 சூப்பர் காயின்கள் வரை பெறலாம்.