அரசு பள்ளிகளில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் ரூ. 7,700 லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருகைப் பதிவேட்டின் படி தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 12,483 பகுதி நேர ஆசிரியர்கள் இந்த சம்பள உயர்வை பெறுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.