Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000… புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது தவணை ரூ.2000 ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மக்கள் ஊரடங்கு காரணமாக வாழ்வாதார சிக்கலை தணிக்கும் வகையில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 3000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அரசுக்கு 105 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த நிவாரண தொகை மூலம் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |