Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…”மனதில் உற்சாகம் அதிகரிக்கும்”.. பணி திருப்திகரமாக இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!!  இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். இனிய வார்த்தையை பேசி நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி திருப்திகரமாக இருக்கும். நண்பருடன் விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும்.

பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும். எந்த ஒரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |