தனுசு ராசி அன்பர்களே…!! இன்று துவண்டு போன வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் நாளாக இருக்கும். சேமிப்புகளை உயர்த்துவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் நண்பர்கள் உங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டு பிரிந்து செல்லக் கூடும்.
திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டியிருக்கும். பணவரவு இன்று இருக்கும் இருந்தாலும் செலவும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் அதனை உறுதிசெய்து செய்வது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கொஞ்சம் தயக்கம் இல்லாமல் ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள்.
அதுமட்டுமில்லாமல் படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்