Categories
தேசிய செய்திகள்

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு…!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவித்து வருகிறது. இந்தியா முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு 40 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தன்னனுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நீங்கள் ஏன் வங்கி கிளைகளில் காத்துக்கிடக்க வேண்டும்? அனைத்தும் ADWM மிஷின்களிலேயே கிடைக்கின்றன? என பதிவிட்டுள்ளது.

அதன்படி கார்ட்லெஸ் முறையில் 49 ஆயிரம் வரையும், டெபிட் கார்டு மூலம் இரண்டு லட்சம் வரையிலும் பணம் டெபாசிட் செய்யலாம். மேலும் பிபிஎப், ஆர்டி கணக்குகள், வேறொருவர் கணக்கிலும் இதன் மூலம் பணம் போட முடியும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |