உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும் இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் ஆண்மை அகற்றப்பட்டுள்ளது. மேலும் 15 வருடங்கள் சிறை தண்டனையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடக்கக்கூட முடியாத வலியால் துடித்த அந்த நபர் என்னுடைய எதிர்காலமே போய்விட்டது. நான் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதினேன். ஆனால் இப்போது இப்படி ஆகிவிட்டது. என்னை போன்ற நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது என்று அழுது புலம்பியுள்ளார்.
மேலும் குழந்தைகளை, சிறுமிகளை, பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து சீரழிக்கும் கொடூரங்களுக்கு இந்த மாதிரியான தண்டனை நல்லது என பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் பாலியல் அத்துமீறல்கள், அக்கிரமங்கள்,குற்றங்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.