சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று வரவு இருமடங்காகும். எதிர்கால நலன் பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசனை செய்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். இன்று துணிச்சலாக முயற்சிகளை மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.
காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து, வெற்றி காண்பீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பாசம் அதிகரிக்கும். அதே போல அக்கம்பக்கத்தினர் இடமும் அன்பு பாராட்டக் கூடும். இன்றைய நாள் செல்வ செழிப்பு ஓரளவு ஏற்படுத்தக் கூடிய சூழல் அமையும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் இரு சேவை வழங்குவது சிறப்பு. காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு