Categories
சினிமா தமிழ் சினிமா

சிவகார்த்திகேயன் படத்திற்காக…. 20 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர்….. வெளியான புகைப்படம்….!!!

நடிகர் பாலசரவணன் சிவகார்த்திகேயன் படத்திற்காக 20 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் தெரியவந்துள்ளது.

கனா காணும் காலம் எனும் சீரியல் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகர் பாலசரவணன். இதை தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் பலர் டான் படத்தில் நடிப்பதற்காக பாலசரவணன் 20 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார் என்று பேசி வருகின்றனர்.

Categories

Tech |