Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களாக” பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கேன்…. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ட்ரூ பேர்ரி மோர். இவர் தற்போது பாலியல் உறவிலிருந்து 6 வருடங்களாக விலகி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்‌. பிரபல அமெரிக்க நடிகர் ஆன்ட்ரு கார்பீல்ட் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடிக்கும் போது 6 மாதங்களாக பாலியல் உறவில் இருந்து விலகி இருப்பதாக கூறியதை நினைவு படுத்திய ட்ரூ 6 மாதங்கள் உறவிலிருந்து விலகி இருப்பது என்பது மிகப் பெரிய விஷயம் இல்லை என்று கூறியுள்ளார்‌. அதாவது நடிகை ட்ரூ சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் ஆண்ட்ரூ 6 மாதங்கள் உறவில் இருந்து விலகி இருந்தேன் என்று கூறுவது மிகப்பெரிய விஷயம் கிடையாது.

நானும் தற்போது 6 வருடங்களாக பாலியல் உறவில் இருந்து விலகி இருக்கிறேன். கடந்த 2016-ம் ஆண்டு என்னுடைய கணவரை விவாகரத்து செய்து பிரிந்த பிறகு இதுவரை பாலியல் உறவில்  ஈடுபடவில்லை. எனக்கு வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமோ பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமோ தற்போது வரை வரவில்லை. ஆனால் சிலர் திருமண உறவில் இருந்து விலகும் போது மற்றொரு உறவில் கலந்து விடுவார்கள். அதில் எவ்வித தவறும் கிடையாது. ஆனால் எனக்கு அது சரியாக வரவில்லை.

அதற்காக நான் பாலியல் உறவை வெறுக்கிறேன் என்று கூற முடியாது. என்னுடைய வாழ்க்கை பயணத்தில் நான் தேடியதில் அன்பு மற்றும் பாலியல் உறவு இரண்டும் வேறு வேறு என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய மகள்களுக்காக வாழவேண்டும் என்பதில் தான் தற்போது உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை‌ ட்ரூவுக்கு கோபல் மேனனுடனான 4 வருட திருமண வாழ்க்கையின் போது ஆலிவ் மற்றும் பிராங்கி என்ற 2 மகள்கள் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |