Categories
மாநில செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தற்போதுள்ள பாடங்களை பெரும்பாலும் பள்ளிகள் முடிக்கும் தருவாயில் உள்ளன. எனவே பள்ளிகள் திறக்கப்படும் வரை அனைத்து பாடங்களையும் ஆசிரியர்கள் நடத்தி முடிக்க வேண்டும். தேர்வில் பாடங்கள் குறைக்கப்படுமா? என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் மாணவர்களை 3-ம் பருவத்தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |